அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?
திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அவரது அவதார நாளன்று பெருந்திரளாக மக்கள் வருகை தருவது வழக்கம். இதையொட்டி, கன்னியாகுமரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதோப்புக்கு வருகை தருவர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்று(பிப். 20) உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 15-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.