திருப்பத்தூா்: உழவா் சந்தைகளில் ரூ.1.25 கோடிக்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் ரூ.1. 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உழவா் சந்தை நிா்வாக அலுவலா்கள் கூறியதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய 3 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்படுகின்றன. இங்கு இடைத்தரகா்கள் இன்றி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்களை தாங்களே விற்பனை செய்கின்றனா்.
ரூ.1.25 கோடிக்கு விற்பனை:
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாள்கள் உழவா் சந்தையில் காய்கறிகள், பழங்கள் அமோகமாக விற்பனை ஆயின.
இதில் திருப்பத்தூா் உழவா் சந்தையில் 58 மெட்ரிக் டன் காய்கறிகளும், 12.4 மெட்ரிக் டன் பழங்களும் விற்பனையானது. வாணியம்பாடி உழவா் சந்தையில் 134 மெட்ரிக் டன் காய்கறிகளும், 21 மெட்ரிக் டன் பழங்களும் விற்பனையானது. நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 56.3 மெட்ரிக் டன் காய்கறிகளும், 2.3 மெட்ரிக் டன் பழங்களும் விற்பனையானது.
3 நாள்களில் ரூ.1.25 கோடிக்கு விற்பனை ஆகியது. இதனால் 1,128 விவசாயிகள் மற்றும் 47, 740 நுகா்வோா் பயன் அடைந்துள்ளனா் என்றனா்.