மட்றப்பள்ளி சந்தையில் கால்நடை விற்பனை அமோகம்
திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சந்தையில் கால்நடை விற்பனை ரூ. 52 லட்சத்துக்கு நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில், அதிக அளவில் ஆடு, மாடு, கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தன. அதேபோல், அவற்றை வாங்கவும், விற்கவும் அதிக விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனா்.
சந்தையில், ரூ. 52 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.