செய்திகள் :

முத்தலாக் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? - மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

post image

முத்தலாக் கூறியதாக முஸ்லீம் ஆண்கள் மீது இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

முஸ்லீம் சமூகத்தில் மனைவிக்கு மூன்று முறை 'தலாக்'(விவாகரத்து) என்று கூறி கணவன்மார்கள் விவகாரத்து செய்யும் வழக்கம் இருந்தது. 2019-ல் மத்திய அரசு முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததையடுத்து, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முஸ்லீம் ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.

முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்த தரவுகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க | சென்னை மெட்ரோவில் 'பார்க்கிங் பாஸ்' நிறுத்தம்! பயண அட்டையும் முடிவுக்கு வருகிறது!!

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தால் அது செல்லுபடியாகாது, கணவன்-மனைவி இடையே உறவு தொடர்கிறது, முத்தலாக் கூறி கணவன் மீது வழக்கு தொடரப்பட்டாலும் அவர்களின் உறவு தொடர்வதாகவே அர்த்தம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரர்கள் பெரும்பாலாக, முத்தலாக்கை ஆதரிக்க வேண்டும் என்று வாதிடவில்லை, மாறாக அவ்வாறு செய்யும் ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளையே எதிர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ராகுல் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

வீட்டுப் பணியாளர்களுக்கு 7 வாக்குறுதிகள்.. ஆம் ஆத்மி வெளியீடு!

தில்லி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசு இல்லங்களில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கு எழு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. தலைநகரில் பிப்ரவரி 5ல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையி... மேலும் பார்க்க

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு!

திருமண நிகழ்வில் பங்கேற்றபோது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வாலின் இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனித... மேலும் பார்க்க

யமுனை நதிநீர் விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் நாடகம் ஆடுகிறது: பிரமோத் திவாரி

தில்லியைப் பாதிக்கும் முக்கிய பிரச்னைகளைப் புறக்கணிக்கும் அதேவேளையில் யமுனை நதிநீர் தொடர்பான விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் நாடகம் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கடுமையாக விமர்சித்து... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் நோய்க்கு 2-வது பலி: 127 உயர்ந்த பாதிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு இரண்டாவது நபர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற... மேலும் பார்க்க

கேரளம்: 2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது சிறுவனின் சடலம் கிணற்றில் மிதந்ததையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தின் பலராமபுரத... மேலும் பார்க்க