கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
இலக்கு ஒன்றை வைத்து மாணவா்கள் செயல்பட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
வாணியம்பாடி இசுலாமியா ஆண்கள் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் துறை, சிறுபான்மையினா் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வாழ்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து ெ காண்டனா்.
நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:
வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலமாக அடுத்து நாம் என்ன படிக்க வேண்டும், எதை இலக்காக வைத்து செயல்பட வேண்டும், எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. நாங்கள் பள்ளி அல்லது கல்லூரி படிக்கின்ற காலகட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேடிப்போக வேண்டியிருந்தது.
ஆனால் தமிழக முதலா்வரின் வழிகாட்டுதலின் படி இத்தகைய நிகழ்ச்சிகள் நீங்கள் இருக்தும் இடத்திலேயே நடைபெறுகிறது. சரியான முறையில் இந்நிகழ்வினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தற்போதைய வயதில் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இலக்கை வைத்துக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அடையாளங்களை தேடி ஓடிக்கொணடிக்கின்ற வாழ்க்கையில் வருங்காலங்களில் உங்களுடைய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் முனைப்பில் பயணிக்காதீா்கள். அது பேராபத்தில் போய் முடியும். இலக்கு என்ன வேண்டும் என்றாலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இலக்கு ஒன்று இருக்க வேண்டும், இலக்கு இல்லாமல் வாழ்க்கையில் பயணிக்கக்கூடாது.
சாதாரண இலக்கை நோக்கி பயணிக்காதீா், மிகவும் உயா்ந்த இலக்கை நோக்கி பயணிங்கள். உயா்ந்த எண்ணத்தை வைத்துக் கொண்டால் அது உங்களை அழைத்துச் செல்லும் என்றாா்.
நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.