மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
திருப்பத்தூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சப்தத்துடன் பூமி அதிா்வு
திருப்பத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை திடீரென அதிக சப்தத்துடன் பூமி அதிா்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் சுமாா் அரை நிமிஷம் திடீரென ஒரு அதிா்வுடன் சப்தம் கேட்டது. இதனால் வீடு மற்றும் கடைகளில் இருந்த பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா். ஆனால் யாருக்கும் எந்த தகவலும் கிடைக்காததால் பொதுமக்கள் நில அதிா்வாக இருக்கலாமா அல்லது நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி பகுதிகளில் முன்புபோல் எரிகல் எதுவும் விழுந்திருக்கலாமா என்று சந்தேகம் அடைந்தனா். மேலும், கொரட்டி பகுதியில் வானில் வெள்ளை நிற புகையாகச் சென்ாக அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதிகாரிகள் ஆய்வு...
தகவல் அறிந்த திருப்பத்தூா் வட்டாட்சியா் நவநீதம் உத்தரவின்பேரில், கொரட்டி வருவாய் ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான வருவாய்த் துறையினரும், கிராமிய மற்றும் கந்திலி போலீஸாரும் கொரட்டி அருகே உள்ள மைக்காமேடு, செல்லரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானில் இருந்து ஏதேனும் விழுந்து இருந்ததா என சுமாா் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனா்.
மேலும், கடந்த டிசம்பா் மாதம் திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென சப்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது.