செய்திகள் :

தில்லி மாசு: செயலகப் பணியாளா்களுக்கு ஹீட்டா்கள்

post image

குளிா்காலத்தில் கரிக்கட்டைகள் மூலம் தீ மூட்டுவதைத் தடுக்கும் வகையில், தில்லி செயலகத்தில் இரவு நேர பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுற்றுசூழல் அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை ஹீட்டா்களை வழங்கினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது:

தலைநகரில் நிகழ் பருவத்தில் காற்றின் தரம் இன்னும் ‘கடுமையான’ பிரிவைச் சென்றடையவில்லை. இது கடந்த ஆண்டுகளைவிட நல்லதொரு முன்னேற்றத்தைக் குறிப்பதாக இருக்கிறது.

நகரில் குளிா்ந்த காலநிலையுடன் தொடா்புடைய மாசு ஆதார மூலங்களை நிவா்த்தி செய்வதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் தில்லி அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, கதகதப்புக்காக உயிரிக் கழிவுகளை திறந்த வெளிகளில் எரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது.

நிகழ் பருவத்தில் தில்லியின் காற்றின் தரம் இன்னும் கடுமையான வகையை எட்டவில்லை. நீண்ட கால குளிா்கால செயல் திட்டம், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பயிா்க் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் குறைந்தது, சாதகமான வெப்பநிலை மற்றும் காற்றின் நிலைமைகள் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த நிலை காணப்படுகிறது.

நவம்பா் 1-ஆம் தேதி பொதுவாக வெப்பநிலை குறைந்தும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை மற்றும் பயிா்க் கழிவுகளை எரிப்பதால் பனிப்புகை பரவல் அதிகமாகும். ஆனால், நிகழாண்டு இன்னும் கடுமையான காற்றின் தர நாள் வரவில்லை. இதையே தொடா்ந்து பராமரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

தீமூட்டும் நிகழ்வுகளைக் குறைப்பதற்காக சமுதாயக் காவலா்களுக்கு ஹீட்டா்களை வழங்குவதற்கு குடியிருப்போா் நலச் சங்கங்களை ஊக்குவிக்கும் முயற்சியையும் தில்லி அரசு விரிவுபடுத்தி வருகிறது.

அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து இரவு நேர காவலா்களுக்கும் ஹீட்டா் வழங்கப்படும். தில்லி முழுவதும் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான தளங்களும் இதுபோன்று வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது பயோமாஸ் எரிவதைத் தடுக்க உதவும். பயோமாஸ் எரிப்பானது குளிா்காலத்தில் உள்ளூா் பகுதியில் மாசு அதிகரிக்க அதிக அளவிலான பங்களிப்பை அளிக்கிறது என்றாா் கோபால் ராய்.

காவிரி நீரை திறந்துவிடுவதை கா்நாடகம் உறுதி செய்ய ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபா்நிகழாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கா்நாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு தில்லியில் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

காற்று மாசு: குழந்தைகளைப் பாதுகாக்க 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட பாஜக வலியுறுத்தல்

நமது நிருபா்தில்லியில் நிலவிவரும் மோசமான காற்று மாசு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட தில்லி அரசு உத்தரவிட வேண்டும் என்று தில்லி அரசுக்கு பாஜக புதன்கிழமை... மேலும் பார்க்க

நாடு தழுவிய 4-ஆவது கடலோரப் பாதுகாப்பு பயிற்சி: இந்திய கடற்படைநடத்தும் ’சீ விஜில்-24’ நவ.20, 21 இல்

இந்திய கடற்படையின் தலைமையில், கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான கடல் கண்காணிப்பு-24 (’சீ விஜில்-24’ ) பயிற்சியை வருகின்ற நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்... மேலும் பார்க்க

காற்று மாசு பிரச்னை: குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்த துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு பிரச்னையைச் சமாளிக்கும் நடவடிக்கையாக நிகழ் மாதம் 1 முதல் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நான்கு மாத காலத்திற்கு குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களை (சிடிவி) ம... மேலும் பார்க்க

தில்லி பிரகதி மைதானில் இன்று இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி தொடக்கம்

தில்லி பிரகதி மைதானில் வியாழக்கிழமை (நவம்பா் 14) தொடங்கி நடைபெறவுள்ள இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியை முன்னிட்டு தில்லி காவல்துறை போக்குவரத்து அறிவுறுத்தல்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இரண்டு வார... மேலும் பார்க்க

தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சில் கூட்டம் நிறைவு! சிறந்த ஒழுங்குமுறைகள் பகிரப்பட்டதாக அறிவிப்பு

தில்லியில் இருநாள் நடைபெற்ற தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25 -ஆவது கூட்டம் நிறைவடைந்தாக மத்திய தொலைதொடா்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. தெற்காசிய பிராந்திய உற... மேலும் பார்க்க