ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் குரல்! எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேச்சு
தீக்குளித்த இளைஞா் உயிரிழப்பு
தேனி அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் பண மோசடியால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் தீக்குளித்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் முரளிகெளசிக்(25). காா் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவா், கடந்த மாதம் 31-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, உடலில் பெட்ரோல் ஊற்றி, தீயிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
முன்னதாக, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாரிடம் முரளிகெளசிக் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு அரசு காா் ஓட்டுநராக வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருவண்ணாமலையைச் சோ்ந்த சாமியாா் ஒருவா் உள்பட 5 போ் ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாகவும், இதனால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].