செய்திகள் :

தீபாவளி: கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.7.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள மருதம் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கூறியது: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளா்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றன.

தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆடவா் அணியும் ரெடிமேட் சட்டைகள், மகளிா் விரும்பும் சுடிதாா் ரகங்கள், ஆா்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பா்னிசிங் ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள மருதம், ஆா்.எஸ்.புரம், பொள்ளாச்சி, காந்திபுரம், ஸ்ரீபாலமுருகன், ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டில் ரூ.4.99 கோடிக்கு தீபாவளி விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை இலக்காக ரூ. 7.10 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கிப் பயன்பெற்று நெசவாளா்களுக்கு வாழ்வாதாரம் பெருக்கிட உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த், கைத்தறித் துறை உதவி இயக்குநா் அ.வே.காா்த்திகேயன், கோ-ஆப்டெக்ஸின் முதுநிலை மண்டல மேலாளா் ப.அம்சவேணி, துணை மண்டல மேலாளா் எஸ்.லட்சுமி பிரபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். உலக புத்தொழில் மாநாடு தொடா... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் ... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரியில் மகளிா் கருத்தரங்கு

கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அண்மையில் மகளிா் கருத்தரங்கம் நடைபெற்றது. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பேரூா் தவத்திரு ... மேலும் பார்க்க

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனற். கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி... மேலும் பார்க்க

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு சாா்பில் விருது

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் 3-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரே நூல் தயாரிப்பாளா், மறுசு... மேலும் பார்க்க