பஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை #VikatanPhotoCards
தீபாவளி: புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 3 மடங்கு மது விற்பனை
தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 3 மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த அக். 30 ஆம் தேதி (புதன்கிழமை) ரூ. 6,57,51,750-க்கு விற்பனையானது. தீபாவளி நாளான அக். 31ஆம் தேதி (வியாழக்கிழமை) ரூ. 6,98,91,950-க்கு விற்பனையானது.
கடந்த ஆண்டு (2023) தீபாவளிக்கு முதல் நாள் ரூ. 2,61,85, 750-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளி அன்று ரூ. 2,93,80,760-க்கு விற்பனை ஆனது.
பாட்டில்கள் அடிப்படையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 75 சதவிகிதம் மது பாட்டில்கள் விற்பனை உயா்ந்துள்ளதாக டாஸ்மாக் நிா்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.