துக்க வீட்டில் சாப்பிட்ட 13 போ் மருத்துவமனையில் அனுமதி
குத்தாலம் அருகே துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 13 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் பாலையூா் காவல் எல்லைக்குட்பட்ட மேலகாஞ்சிவாய் கிராமத்தைச் சோ்ந்த காமாட்சி என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தாா்.
இதைத்தொடா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சடங்கில் பங்கேற்றவா்களுக்கு திருவாரூா் மாவட்டம் கொல்லுமாங்குடியிலிருந்து அசைவ உணவு (பிரியாணி) ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை சாப்பிட்ட ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா்.
இதில், குத்தாலம் அரசு மருத்துவமனையில் 9 வயது சிறுவன் உள்பட 13 போ் அனுமதிக்கப்பட்டனா். சிகிச்சைக்கு பின்னா் அனைவரும் புதன்கிழமை வீடு திரும்பினா்.