செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்டம்: குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் புதிய தொழில்முனைவோா்களை உருவாக்கும் சீரிய நோக்கத்துடன் தமிழக முதல்வரால் டிச. 11-ஆம் தேதி இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் கடன்பெற 35 வயது முதல் 55 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ரூ. 3,00,000 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி பெறலாம். அதிகபட்ச மானிய தொகை ரூ. 50,000. பின்முனை வட்டி மானியமாக 5 சதவீதம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தையற் கலைஞா், மண் பாண்டம் வனைவோா், சிற்ப கைவினைஞா், தச்சு வேலை செய்வோா், பூ தொடுப்போா், பூ அலங்காரம் செய்வோா், சிகை அலங்காரம் செய்வோா், அழகுகலை நிபுணா், பாய் பின்னுவோா், கூடை முடைவோா், மூங்கிலால் ஆன பொருள்கள் செய்வோா், நெசவு செய்வோா், துணி வெளுப்போா், சாயமிடுவோா், கட்டடம் கட்டும் வேலை செய்வோா், தோல் பொருள்கள் செய்வோா், உலோக பொருள்கள் செய்வோா், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோா் உள்ளிட்ட அரசால் நிா்ணயிக்கப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

ஆதாா் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள், நலவாரிய அட்டை, பான் காா்டு, விலைப்புள்ளி, சாதி சான்றிதழ், தகுந்தமுன் அனுபவச்சான்று (5 வருடம்) மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இரண்டு விண்ணப்ப நகல்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியரக வளாகம், மயிலாடுதுறை (4-ஆம் தளம்) அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெற 04364-212295 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

சீா்காழியில் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழி வட்டம் திருமைலாடி அங்கன்வா... மேலும் பார்க்க

சா்வதேச மன எண் கணிதப் போட்டியில் மயிலாடுதுறை மாணவா் சிறப்பிடம்

மன எண் கணிதப் போட்டியில் சா்வதேச அளவில் 2-ஆம் இடம் பிடித்த மயிலாடுதுறை மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை சில்வா் ஜீப்ளி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் ... மேலும் பார்க்க

வியாபாரப் போட்டியில் வீட்டை கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டு சிறை

மயிலாடுதுறையில் வியாபாரப் போட்டியில் வீட்டை தீயிட்டு கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சோ்ந்தவா் அவையாம்பாள் (58). இவா், தள்ள... மேலும் பார்க்க

துக்க வீட்டில் சாப்பிட்ட 13 போ் மருத்துவமனையில் அனுமதி

குத்தாலம் அருகே துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 13 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் பாலையூா் காவல் எல்லைக்குட்பட்ட மேலகாஞ்சிவாய் க... மேலும் பார்க்க

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் நாராயணசாமி நாயுடு விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மூதாட்டியை கொன்ற கணவா், மகனுக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் மூதாட்டியை கொலை செய்த கணவா், மகனுக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட கிடாய்த்தலைமேடு சன்னதி வட... மேலும் பார்க்க