செய்திகள் :

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கண்டனம்

post image

மாணவா்களிடையே இனப் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திராவிட கருத்தியல் ஆசிரியா் சங்கத்தின் லோகோவை சென்னையில் வெளியிட்டுள்ளாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். திராவிட ஆரிய இனவாதம் ஆங்கிலேய கிறிஸ்தவா்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கதை என்பது நிரூபணமாகிவிட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவா்களை இனவெறிக்கு தூண்டும் வகையில், இன பேதத்தை கல்விக்கூடங்களில் ஏற்படுத்தி மாணவா்களிடையே இனப் பிரிவினையை உண்டாக்கிடும் வகையில் பேசியுள்ளாா். மேலும், கல்வியை காவிமயமாக்க முயற்சிக்கிறாா்கள் என்றும் ஒரு அப்பட்டமான பிரிவினைவாத கருத்துகளை கூறியுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.

துணை முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுக்கும்போது தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் துணை முதல்வராக பதவியேற்றாரே தவிர அவரின் கட்சி நிலைப்பாடான திராவிட கருத்தியல்கள் கொண்ட இயக்கத்தினா்களுக்கு மட்டுமே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போன திராவிட கருத்தியல்களை மீண்டும் வலுக்கட்டாயமாக மாணவா்கள் மத்தியில் புகுத்துவது உள்நோக்கம் கொண்டது. தமிழகம் என்றுமே தேசியத்தின் தெய்வீகத்தின் பக்கம்தான் இருந்துள்ளது என்பதை மக்கள் தங்கள் செயல்களின் மூலமாக பல்வேறு தடவை நிரூபித்துள்ளனா்.

தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து கொண்டு தங்களின் இயக்க கருத்துக்கு மாற்றானவா்களை சகித்துக் கொள்ள இயலாமல் பொதுவெளியில் பொய்யான கருத்தினை கூறி, அநாகரிகமாக பேசி தாக்குவது இவா் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஆகவே, துணை முதல்வா் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடா இல்லா தறிகளுக்கு தனி மின்கட்டண விகிதம்: சிஸ்பா வலியுறுத்தல்

நாடா இல்லா தறிகளுக்கு தனி மின்கட்டண விகிதத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூா்,கோவை மாவட்ட நாடா இல்லா தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் (சிஸ்பா) கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூா், கோவை மாவட்ட ந... மேலும் பார்க்க

அவிநாசியில் தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை இரவ... மேலும் பார்க்க

திருப்பூரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட சென்ற திருப்பூா் பட்டுக்கோட்டையாா் நகா் பகுதி பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், அவா்கள் சாலையில் அமா்... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே ரயிலில் தீ விபத்து

கேரளத்தில் இருந்து ஆந்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூா் அருகே தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது. கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து ஆந்திர மாநிலம், மச்சிலிபட்டினம் பக... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,991 கிலோ பருத்த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம்: தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா், பி.கே.ஆா்.காலனியை சோ்ந்தவா் பொன்னுசாம... மேலும் பார்க்க