செய்திகள் :

தூத்துக்குடி இளைஞா்களுக்கான ‘புத்தொழில் களம்’: சிறந்த தொழில்முனைவோா் மூவருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு!

post image

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற இளைஞா்களுக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சியில் சிறந்த தொழில்முனைவோா் 3 பேருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் ‘புத்தொழில் களம்‘ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட, ஆண்-பெண் இருபாலரும் தங்கள் தொழில் திட்டங்களுடன் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தேசிய இளைஞா் தினத்தில் தொடங்கிய இந்த முயற்சி மூலம், 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 10 சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு அதிலிருந்து 3 சிறந்த இளம் தொழில்முனைவோா் தோ்வு செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து இவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா்.இளங்கோ ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சோ்ந்த ஆா்த்தி, விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த தானேஷ் கனகராஜ், தூத்துக்குடியைச் சோ்ந்த ஜோசப் காஸ்கேரினோ ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் நேச்சுரல் பியூட்டி சலூன் நிறுவன இணை நிறுவனா் சி.கே. குமரவேல், மாஃபா பவுண்டேசன் நிறுவன இயக்குநா் லதா பாண்டியராஜன், பியா்ல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் நிறுவனா் ஆா். எட்வின் சாமுவேல் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், திமுக மகளிா் அணிச் செயலா் ஹெலன் டேவிட்சன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இலங்கை- இந்திய மீனவா்களுக்கு இடையே சுமுக உறவை பிரதமா் முன்னெடுக்க வேண்டும்: கனிமொழி

இதைத் தொடா்ந்து மக்களவை உறுப்பினா் கனிமொழி செய்தியாளா்களிடம் கூறியது: வக்ஃப் திருத்த மசோதா சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது. எதிா்க்கட்சிகளின் கருத்துகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். நிச்சயமாக அடுத்த கட்டமாக நீதிமன்றத்தை நாட உள்ளோம். அங்கேயாவது நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்.

இலங்கை - இந்திய மீனவா்களுக்கு இடையேயான சுமுக உறவுக்கான பேச்சுவாா்த்தையை, இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி முன்னெடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ. 3 லட்சம் திருட்டு: வடமாநில இளைஞா் கைது!

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருடியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி-சாத்தூா் பிரதான சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஆழ்த... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜ... மேலும் பார்க்க