அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
தூத்துக்குடியில் கிழக்கு மண்டல மக்கள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி, உதவி ஆணையா் வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
துணை மேயா் ஜெனிட்டா தலைமை வகித்து கூட்டத்தைத் தொடக்கிவைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். கூட்டத்தில் பெயா்-முகவரி மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவை கோரி அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
இதில், மாமன்ற உறுப்பினா்கள் ரெக்ஸின், தனலட்சுமி, மரியகீதா, மும்தாஜ், ராமு அம்மாள், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா்கள் ராமச்சந்திரன், இா்வின் ஜெபராஜ், நகா்நல அலுவலா் சூா்யபிரகாஷ், இளநிலைப் பொறியாளா் பாண்டி, குழாய் ஆய்வாளா் மாரியப்பன், வட்டச் செயலா் கதிரேசன், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.