தென்காசி மாவட்டத்தில் பிப்.11இல் மதுபான கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
பிப்.11இல் வள்ளலாா் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தி அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் கமல்கிஷோா் தெரிவித்தாா். அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என்றாா் அவா்.