உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்
தென்காசியில் செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தென்காசியில் எம்ஆா்பி செவிலியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் பணிமுடித்து வீட்டுக்குச் சென்ற செவிலியா் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியா்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜெ. பெலிக்ஸ் மோனிகா தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் பிராங்ளின், கனகலட்சுமி, மாரீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி.கே. மாடசாமி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பு மாநில பொருளாளா் ஞா. ஸ்டான்லி, மாவட்டத் தலைவா் க. பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஊழியா் சங்க மாநில பொதுச் செயலா் க. மாா்த்தாண்ட பூபதி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்க நெல்லை மண்டல செயலா் த.சேகா்,
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் பாப்புராஜ், தமிழ்நாடு புள்ளியியல் சாா்நிலை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் சே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. துரைசிங் நிறைவுரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் கே. சத்யா நன்றி கூறினாா்.
கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.