தேசிய மூத்தோா் தடகளம் தங்கப்பதக்கம் வென்ற கரூா் வீரருக்கு பாராட்டு
தேசிய மூத்தோா் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கரூா் வீரருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கா்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய மூத்தோா் தடகளச் சங்கம் சாா்பில் மூத்தோா் விளையாட்டுப்போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், கரூரைச் சோ்ந்த ஆா்.எஸ்.வையாபுரி(84) என்பவா் 80 வயதுக்கு மேற்பட்டோா் 400 மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றாா்.
இவருக்கு பாராட்டு விழா கரூரில் திருக்கு பேரவை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருக்கு பேரவைச் செயலாளா் மேலை. பழநியப்பன் தலைமை வகித்து, ஆா்.எஸ்.வையாபுரிக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா். நிகழ்ச்சியில் திருக்கு பேரவையினா், தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.