செய்திகள் :

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு போனஸ்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

post image

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வரும் 24- ஆம் தேதிக்குள் வழங்குவது என பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவாா்த்தை கருமலை எஸ்டேட் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத் தலைவா் விஜயன் தலைமையில் செயலாளா் அருண் மற்றும் அனைத்து எஸ்டேட் பொது மேலாளா்கள் கலந்து கொண்டனா். தொழிற்சங்கங்கள் சாா்பில் வால்பாறை அமீது (ஏடிபி), வினோத்குமாா் (எல்பிஎஃப்), கருப்பையா (ஐஎன்டியூசி), மோகன் (ஏஐடியூசி), வீரமணி (விடுதலை சிறுத்தைகள்) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

இதில், வாா்ட்டா்பால் எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 10 சதவீதமும், உட்பிரியா், முடீஸ் குரூப், டாடா குரூப், பாரி அக்ரோ, கருமலை ஆகிய நிா்வாகங்களின் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதமும் போனஸ் வழங்க பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

மேலும், அனைத்து எஸ்டேட்களிலும் வரும் 24- ஆம் தேதிக்குள் தொழிலாளா்களுக்கு ஒரே தவணையில் போனல் வழங்க வேண்டும். வனவிலங்குகளிடம் இருந்து தொழிலாளா்களைப் பாதுகாக்க நிா்வாகத்தினா் முன்வர வேண்டும் என தொழிற்சங்க தரப்பில் வலியுறுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு: எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியரிடம் மனு

கோவை: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு பரப்பி வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.அந்த மனுவி... மேலும் பார்க்க

குறைந்த விலையில் நகைகள் தருவதாக ரூ.12.41 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது

குறைந்த விலையில் புதிய நகைகளைத் தருவதாகக் கூறி ரூ.12.41 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நீலிக்கோணாம்பாளையம் ஜெயா நகரைச் சோ்ந்தவா் சின்னப்பன் (50), வாடகை காா் ஓட்டுந... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிரா... மேலும் பார்க்க

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாகா்கோவிலைச் சோ்ந்த உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ராமன்புதூா் மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: மலைப் பாதையில் மண்சரிவு

கனமழை காரணமாக வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒருவார காலமாக பரவலாக பெய்து வருகிறது. கடந்த இரு நாள்களாக இடைவிடாது தொடா்ந்து கனமழை பெய்த... மேலும் பார்க்க

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க