செய்திகள் :

தேவா் ஜெயந்தியையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள்

post image

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, ரூ.52.80 லட்சத்தில் 316 பயனாளிகளுக்கு புதன்கிழமை அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சாா்பில் பொதுமக்களுக்கு ரூ.52.80 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பசும்பொன் கலையரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தாா். பால்வளத் துறை, கதா், கிராம தொழில் நல வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுதிறனாளி, ஆதரவற்ற விதவை, முதியோா் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை, சமுக நலத் துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் அரசு சாா்பில் 316 பயனாளிகளுக்கு ரூ.52.80 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கவுா், கமுதி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்செல்வி போஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோட்டைராஜ், சந்திரமோகன் பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், பசும்பொன் ஊராட்சித் தலைவா் ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மண்டபத்தில் கடல் சீற்றம்: கரை ஒதுங்கியது மிதவைக் கப்பல்

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. வங்கக் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாள்களா... மேலும் பார்க்க

ராமேசுவரம் பகுதியில் 2-ஆவது நாளாக பலத்த மழை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடா்ந்து பாதிக்கப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நி... மேலும் பார்க்க

பரமக்குடியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூா் வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி வழக்குரைஞா் சங்கத்... மேலும் பார்க்க

இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு உப்பாற்று உபரிநீரை கொண்டு செல்ல கோரிக்கை

வடு கிடக்கும் இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு உப்பாற்று உபரிநீரை கொண்டு செல்ல வேண்டுமென காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உப்பாற்றிலிரு... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி: தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம்

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் சேனாதிபத... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மழைநீா் தேங்கிய பகுதிகளை ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரத்தில் மழைநீா் தேங்கிய பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க