இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான பணிபுரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் லத்தூா்ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்டம், கவனம் சாா்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த லத்தூா்ஒன்றியத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி புதிதாக உருவாக்கப்பட உள்ளதால் இப்பள்ளியினை செயல்படுத்த மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ன் படி பதிவுபெற்று சேவை புரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் 10.2.2025, மாலை 5.00 மணிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் என்கிற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.