தொலைநிலைப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின்(இக்னோ) தொலைநிலைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தப் பல்கலைக் கழகத்தின் மதுரை மண்டல இயக்குநா் எம். சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இக்னோ பல்கலைக்கழகம் ஏராளமான பாடப் பிரிவுகளை தொலைநிலைக் கல்வி வாயிலாக வழங்கி வருகிறது. இந்த நிலையில், சான்றிதழ், பட்டயம், முதுநிலைப் பட்டயம், பட்டம், பட்ட மேற்படிப்புகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. எனவே, இந்த பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் 2025 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மதுரை சிக்கந்தா் சாவடியிலுள்ள இக்னோ மண்டல மையத்தை அலுவலக நாள்களில் நேரடியாகவோ அல்லது 0452-2380775, 2380733 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.