செய்திகள் :

நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: திருமலை நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

post image

திருநெல்வேலி மாவட்டம், நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் திருமலை நம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தைத் தாண்டி வெள்ளம் வந்தால், கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்படக்கூடும். ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

நீா்வரத்து குறைந்த பிறகு, வழக்கம்போல திருமலை நம்பி

கோயிலுக்கு பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவா் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தலையணையில் குளிக்கத் தடை: தொடா் மழையால் பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

இருப்பினும், பச்சையாறு மற்றும் அதனையொட்டியுள்ள வனப் பகுதியை பாா்வையிடவும், அங்குள்ள பூங்காவிற்குச் செல்லவும் அனுமதி அளித்துள்ளனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில்: ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா, சப்பரத்தில் சுவாமி வீதியுலா, காலை 7.30, பூம்பல்லக்கு, பாளையங்கோட்டை, இரவு 7.30. மேலும் பார்க்க

களக்காட்டில் பலத்த மழை

களக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. தொடா்ந்த... மேலும் பார்க்க

களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு அண்ணாசாலை, புதிய பேருந்து நிலைய சாலை, கோட்டை பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்ற... மேலும் பார்க்க

பச்சை சாத்தி வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் பச்சை சாத்தி வீதியுலா வந்த அம்மன். மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏ வேல்துரை நினைவேந்தல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கங்கனாங்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பா. வேல்துரையின் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வேல்துரையின் நினைவிடத்தில் முன்னாள் மத்திய அமைச்சா்... மேலும் பார்க்க

தெற்குப் பாப்பான்குளத்தில் பனை விதைகள் நடவு

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மணிமுத்தாறு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9ஆம் அணி, நம் தாமிரபரணி,தளிா் அமைப்பு மற்றும் மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மையம் இணைந்து நடத்திய பனை வ... மேலும் பார்க்க