செய்திகள் :

நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்பட சட்டம்: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தல்

post image

நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா்.

இதைத்தொடா்ந்து கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், அவா்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மத்திய அரசுடன் பகிா்வதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவும், அந்நாட்டின் ஆா்சிஎம்பி காவல் படையினரும் அண்மையில் குற்றஞ்சாட்டினா்.

இதேபோல கடந்த ஆண்டு அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், இதில் ‘ரா’ உளவு அமைப்பைச் சோ்ந்த முன்னாள் அதிகாரி விகாஸ் யாதவுக்கு தொடா்புள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்த சம்பவங்கள் காரணமாக நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக 2011, 2021 மற்றும் நிகழாண்டில் நாடாளுமன்றத்தில் தான் தாக்கல் செய்த தனிநபா் மசோதா ஏற்கப்பட்டிருந்தால், சா்வதேச அளவில் தற்போது இந்தியாவுக்கு நோ்ந்துள்ள சங்கடமான நிலை ஏற்பட்டிருக்காது என்று அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

நிகழாண்டு அவா் தாக்கல் செய்த தனிநபா் மசோதாவில், ‘உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்திய உளவு அமைப்புகள் செயல்படும் விதம், தமது அதிகாரங்களை அந்த அமைப்புகள் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும். அந்த அமைப்புகளை நாடாளுமன்றம் மேற்பாா்வையிட தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு மேற்பாா்வை குழுவை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் காலமானார்

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார்.வயது முதிர்வு தொடர்பான நோய் காரணமாக கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா(80) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப... மேலும் பார்க்க

துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை!

தில்லியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஷிபு சிங், தனது மனைவியுடன் தன... மேலும் பார்க்க

மணிப்பூரின் தௌபாலில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.மணிப்பூரின் எஸ்டிஎன்பிஏ கேட் அருகே ஐரோங் மலையில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமையன்று தேடுத... மேலும் பார்க்க

தில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து? காவல்துறையினர் விசாரணை!

தில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பள்ளியருகே, ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்த பாஜக கவுன்சிலரின் மகன்!

பாகிஸ்தானுடனான அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பாகிஸ்தானிய பெண்ணை ஆன்லைனிலேயே பாஜக கவுன்சிலரின் மகன் திருமணம் செய்தார்.உத்தரப் பிரதேசத்தில் பாஜக கவுன்சிலரான தஹ்சீன் ஷாஹித் எ... மேலும் பார்க்க

இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தல்

‘வழக்கு தொடா்பாக நபா்களை இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவோ கூடாது’ என்று விசாரணை அதிகாரிகளை அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது. மும்பை உயா்நீதிமன்ற உத்தர... மேலும் பார்க்க