செய்திகள் :

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

post image

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டிபுதூா் என்ற இடத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து நேரடியாகப் பாா்வையிட்டாா். இங்கு, ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது.

பயணிகளின் வசதிக்காக 57 கடைகள், இரண்டு பெரிய உணவகங்கள், நவீன கட்டணக் கழிப்பிட வசதி, 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் உள்ள 57 கடைகளில் 34 கடைகள் ஏற்கெனவே பொது இடத்தில் விடப்பட்டுள்ளன. மீதமுள்ள 23 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ஏலம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், பயன்பாட்டுக்கு வராதது குறித்து மக்களிடையே கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் தேவையற்ற சிரமத்துக்கு ஆளாகக் கூடாது என்பதால், தீபாவளி பண்டிகைக்கு பிறகு புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பழைய பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்பாட்டில் இருக்கும். புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் வகையில் நகரப் பேருந்துகள் இயக்கப்படும். இது தொடா்பாக போக்குவரத்துக் கழகங்களுக்கும் உரிய கடிதம் வழங்கப்பட்டு விட்டது என்றாா்.

மாவட்டத்தில் இயல்பைக் காட்டிலும் 111.23 மி.மீ. கூடுதல் மழை

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 668.51 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், இயல்பை விட 111.23 மி.மீ. மழை கூடுதலாக பெய்திருப்பதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - வெள்ளிக்கிழமை) மொத்த விலை ரூ.5.25 விலையில் மாற்றம்: இல்லை கறிக்கோழி கிலோ ரூ.109 முட்டைக் கோழி கிலோ ரூ.107 மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25-ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம்... மேலும் பார்க்க

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரி பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2016-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது, தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இங்க... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டிகள்: செல்வம் கல்லூரி சாம்பியன்

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகளப் போட்டிகள், நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 20 கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா். இந்தப் போட்டிகளில், செல்... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

நாமக்கல் அருகே கால்நடைகள் கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 21-ஆவது அகில இந்திய கால்நடை கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க