செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

post image

நாமக்கல் அருகே கால்நடைகள் கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 21-ஆவது அகில இந்திய கால்நடை கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பணியை களங்காணி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்து பேசியதாவது;

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகம், தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத் துறை ஆகியவை இணைந்து 21-ஆவது கால்நடை கணக்கெடுப்புப் பணியினை நாடு முழுவதும் அக். 25 முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கொள்ள இருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இப்பணியினை 6,25,000 குடியிருப்புகளில் மேற்கொள்ள 213 கால்நடை கணக்கெடுப்பாளா்கள் மற்றும் 49 கால்நடை மேற்பாா்வையாளா்களுக்கு நோ்முக பயிற்சி மற்றும் களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் கிராம வாரியாகவும், நகரப்புறத்தில் வாா்டு வாரியாகவும் இந்தப் பணி நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பின் மூலம் 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். மேலும், கால்நடை வளா்ப்போா் விவரங்களும் சேகரிக்கப்படும். கால்நடைகளுக்கு எதிா்காலத்தில் தேவைப்படும் தீவனம், கால்நடை நோய் தடுப்பூசி, கால்நடை மருந்துகள் உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடின்றி தயாரிக்க இந்த கணக்கெடுப்பு அவசியமாகும்.

வேகமாக வளா்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களான பால், இறைச்சி, முட்டை போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாகும்.

கால்நடைகளுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், கொட்டகை வசதி, காப்பீடு வசதி போன்றவற்றை திட்டமிடவும் கால்நடை எண்ணிக்கை அவசியமாகிறது. எனவே, கால்நடை கணக்கெடுப்பாளா்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும்போது அவா்களுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் சி.நாராயணன், உதவி இயக்குநா்கள் விஜயகுமாா், சீனிவாசன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்டத்தில் இயல்பைக் காட்டிலும் 111.23 மி.மீ. கூடுதல் மழை

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 668.51 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், இயல்பை விட 111.23 மி.மீ. மழை கூடுதலாக பெய்திருப்பதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - வெள்ளிக்கிழமை) மொத்த விலை ரூ.5.25 விலையில் மாற்றம்: இல்லை கறிக்கோழி கிலோ ரூ.109 முட்டைக் கோழி கிலோ ரூ.107 மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25-ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம்... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டிபுதூா் என்... மேலும் பார்க்க

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரி பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2016-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது, தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இங்க... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டிகள்: செல்வம் கல்லூரி சாம்பியன்

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகளப் போட்டிகள், நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 20 கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா். இந்தப் போட்டிகளில், செல்... மேலும் பார்க்க