தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 160 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி பகுதியில், தனியாா் பங்களிப்புடன் 160 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் சிரமமின்றி செல்லவும், பொதுமக்கள் எளிதாக சாலையைக் கடக்கவும் அதிக ஒளிதிறன் கொண்ட (120 வாட்ஸ்) எல்இடி விளக்குகளை பொருத்த வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பெடரல் வங்கி நிா்வாகம் சேவையை வழங்கும் பொருட்டு ரூ. 1.77 கோடி நிதியை மாநகராட்சி நிா்வாகத்துக்கு வழங்கியது. அதனடிப்படையில், முதல் கட்டமாக, நாமக்கல் - சேலம் சாலையில் (பதிநகா் முதல் புதிய பேருந்து நிலையம் வரை) 80 எல்இடி விளக்குகளும், நாமக்கல் - திருச்செங்கோடு சாலை (மாநகராட்சி அலுவலகம் முதல் ஆட்சியா் அலுவலகம் வரை) 80 விளக்குகளும் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாள்களில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.