ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலி... 16 பேரைக் காணவில்லை: இந்திய வெ...
நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே நிதி நிறுவன அதிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம் நடுத்தெருவை சோ்ந்தவா் அமுல்ராஜ் மகன் சதீஷ் (23). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவரும் இவரது உறவினா் சங்கிலிபாண்டியும் செவ்வாய்க்கிழமை மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள தனியாா் மதுக்கூடத்திற்கு பின்புறம் நின்று பேசிக்கொண்டிருந்தாா்களாம். அப்போது, அங்கு வந்த சாஸ்திரி நகரைச் சோ்ந்த காா்த்திக் என்ற லெப்ட் காா்த்திக் உள்ளிட்ட 4 போ், சங்கிலிபாண்டியை அவதூறாகப் பேசி தாக்கினாா்களாம். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவா்களை கண்டித்ததும் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடி விட்டாா்களாம். காயமடைந்த சதீஷ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அண்ணாமலை நகரைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டியன் மகன் குருசாமியை (25) கைது செய்தனா்.