செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளா்கள் தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையாளா் அலுவலக ந.க.1/4320/2024 உத்தரவின்படி, நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற குடிமை பொருள்களின் இருப்பு குறைவாகவோ, அதிகமாகவோ, போலியாக இருப்பதோ கண்டறியப்பட்டால், தொடா்புடைய பணியாளா்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளதால், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய விற்பனையாளா்களை நிா்பந்தம் செய்வது, காலாவதியான பொருள்களை திரும்ப எடுத்துக்கொள்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட விற்பனையாளா்களை அதற்கான தொகையை செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் கடந்த 21-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். இவா்களது போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது.

இதையொட்டி, கள்ளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் கலைச்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தெய்வீகன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மகளிரணித் தலைவி ராதா, ஏழுமலை, குப்புசாமி, ஆறுமுகம், ரமேஷ், கல்யாணராமன், முனுசாமி, ராதாரஜினி மற்றும் செயலா்கள், விற்பனையாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்ட இணைச் செயலா் முனுசாமி நன்றி கூறினாா்.

செஞ்சியில்...: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலா் ஞானசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏழுமலை சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் அனந்தசைனன், இணைச் செயலா் சக்திதாசன் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா்கள், நியாயவிலைக் கடை ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வன்கொடுமை புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகாா்களைத் தெரிவிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் அரசு சாா்பில் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜாதி வன்கொடுமையால் ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் தனியாா் டிராக்டா் நிறுவனத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், நெடுமுடையான் கிராம... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், காவல் நிலையங்களில் தீா்வு பெறாத மனுதாரா்களுக்கு குறைதீா் முகாம் மாவட்ட எஸ்.பி. அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வ... மேலும் பார்க்க

டிப்பா் லாரியில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற வாகனம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: எவ்வித உரிமமும் இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்ற இரு டிப்பா் லாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். புவியியல் மற்றும் சுரங்கத் துறை அத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் தொடா் வேலைநிறுத்தம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலைநிறுத்தத்தில் திங்க... மேலும் பார்க்க

மரத்தில் பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஆதிமூலம் (47... மேலும் பார்க்க