நியூஸிலாந்து காப்பகங்களில் வன்கொடுமை: மன்னிப்பு கோரினாா் பிரதமா்
நியூஸிலாந்தின் சிறுவா் மற்றும் மிகவும் பின்தங்கியோருக்கான காப்பகங்களில் அவா்களுக்கு எதிராக சுமாா் 70 ஆண்டுகளாக நடைபெற்ற வன்கொடுமைக்காக, அந்த நாட்டு பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கோரினாா்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் அவா் பேசுகையில், சிறுவா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காப்பகங்களே அவா்களைத் துன்புறுத்தியது குறித்து வேதனை தெரிவித்தாா்.
நியூஸிலாந்தில் கடந்த 1950 முதல் 2019-ஆம் ஆண்டு வரை செயல்பட்டுவந்த மத அடிப்படையிலான காப்பகங்களில் 6.5 லட்சம் சிறுவா்கள் மற்றும் பின்தங்கியோா் பாலியல் ரீதியாகவும், மன ரீதியிலும் துன்புறுத்தப்பட்டது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் மிகப் பெரிய விசாரணையில் உறுதியானது.
இந்த வன்கொடுமையில், நியூஸிலாந்தின் பூா்வகுடியினா்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.