செய்திகள் :

நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து வெளியான விடுதலை - 2 : எந்த ஓடியில் பார்க்கலாம்?

post image

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் ‘டைரெக்டர் கட்’ வெர்ஷன் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் கடந்த டிச. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய வணிக வெற்றி சாத்தியமாகவில்லை எனக் கூறப்பட்டது.

இருப்பினும், இப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்து வணிக ரீதியான தோல்வியிலிருந்து மீண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

விடுதலை திரைப்படத்துக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பாக 2 மணி நேரம் 37 நிமிஷங்கள் திரையில் வெளியாகிய வெர்ஷன் ஜனவரியில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

தற்போது, நீக்கப்பட்ட காட்சிகளுடன் 3 மணி நேரம் 7 நிமிஷங்களுடன் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சர்தார் - 2 படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் - 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்... மேலும் பார்க்க

ஆர்யா - 36 படம் அறிவிப்பு!

நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை... மேலும் பார்க்க

டிஎன்ஏ படத்தின் புதிய பாடல்!

நடிகர் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்... மேலும் பார்க்க

வாடிவாசல் கைவிடப்படுகிறதா? தயாரிப்பாளர் பதில்!

சூர்யா - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழு... மேலும் பார்க்க

ஆழப்புழா ஜிம்கானா ஓடிடி தேதி!

மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஆழப்புழா ஜிம்கானா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், கணபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆழப்ப... மேலும் பார்க்க