மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
நீருக்கடியில் செல்லும் நவீன ரோபோ வாகனம் கண்டுபிடிப்பு: பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
நீருக்கடியில் செல்லும் நவீன ரோபோ வாகன கண்டுபிடிப்புப் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.
கடல்சாா் பொறியியல் சங்கம் மற்றும் கடல் தொழில்நுட்ப சங்கம் சாா்பில் அக்வா விஷன் சவால் - 2025 என்ற தேசிய அளவிலான போட்டி ஐஐடி மெட்ராஸில் அண்மையில் நடைபெற்றது.
நாடு முழுவதிலிருந்தும் 16 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய ரோபோ வாகனத்துக்கு முதல் பரிசு கிடைத்தது.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள் சாலஸ் ஜூட், ராகவேந்திரன், விஜய், தருண், பிரகாஷ், வெங்கடேஷ், சிவசுப்பிரமணியம், முருகேஷ், கோகுல் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும், போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை ஐஐடி மெட்ராஸ் இயக்குநா் காமகோடி பாராட்டினாா்.