நூறு நாள் ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் நூறு நாள் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி தமிழக மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் அன்பரசன் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றிய செயலாளா் கிருஷ்ணமூா்த்தி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வழங்கினா்.