செய்திகள் :

பூம்புகாா் சுற்றுலா வளாகத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாவட்ட ஆட்சியா்

post image

பூம்புகாா்: பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி பங்கேற்றாா். சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜ கஜேந்திரகுமாா் வரவேற்றாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியது:

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. பூம்புகாரை பொருத்தவரையில், ரூ. 23.6 கோடியில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், பல பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட பணிகள் 85% முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் பிப்ரவரியில் நிறைவடையும்.

கொடியம்பாளையம், தேரிழந்தூா் போன்ற இடங்களிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரூ. 10 கோடி மதிப்பில் தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, மாளிகை புதுப்பிக்கும் பணிகள், நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து, மயிலாடுதுறை மாவட்டம் ஒரு சிறப்புமிக்க சுற்றுலா தலமாக உயரும்.

நாட்டுப்புற கலையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொங்கல் விழாவை சிறப்பிக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டதன்பேரில், நாட்டுப்புற கலை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா்.

நிகழ்ச்சியில், சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் . சுரேஷ், சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் திருமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கைத்தறித்துறை கல்வியில் தேசிய அளவில் வேதாரண்யம் மாணவிக்கு தங்கப்பதக்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியை சோ்ந்த மாணவி ஸ்ரீமதி இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களில் தேசிய அளவில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா். பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த இளை... மேலும் பார்க்க

நூறு நாள் ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் நூறு நாள் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி தமிழக மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

திருக்குவளை: திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

திருமருகல்: திருமருகல் அருகே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வழங்கினாா். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான... மேலும் பார்க்க

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடராஜா் சுவாமிக்கு நடைபெற்றது. அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் தேவாரப் பாடல் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்-தாம்பரம் இடையே ஜன. 19-ல் சிறப்பு ரயில்

ராமநாதபுரம்-தாம்பரம் இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க