செய்திகள் :

நெதன்யாகுவை வாழ்த்தி மோடி போன்கால்; `இனப்படுகொலை நிகழ்த்தியவரை பாராட்டுவதா?' - காங்கிரஸ் விமர்சனம்

post image

இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக கையெழுத்தாகி உள்ளது.

மோடி - நெதன்யாகு

இதை பாராட்டி நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் போன்காலில் பேசினார் இந்திய பிரதமர் மோடி.

அது குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்பின் காசா அமைதி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வாழ்த்தி நான் எனது நண்பர் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினேன்.

பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் காசா மக்களுக்கு அதிகரிக்கப்படும் மனிதநேய உதவி குறித்த ஒப்பந்தத்தை வரவேற்கிறேன்.

உலகில் எங்கேயும் எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷின் விமர்சனம்

மோடியின் இந்தப் போன்கால் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "கடந்த 20 மாதங்களாக, காசாவில் இனப்படுகொலையை நிகழ்த்திய பிரதமர் நெதன்யாகுவிற்கு தகுதியில்லாத பாராட்டுகளை மோடி வழங்கியது அதிர்ச்சிக்குள்ளானது மற்றும் அவமானகரமானது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

நேற்று மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடமும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படையெடுத்த இளைஞர்கள்; ஸ்தம்பித்த போக்குவரத்து - முதல் நாள் இரவே மூடப்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க

பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்; மாணவர்கள் மீது தடியடி - பதற்றத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகம்

`நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்கறாரு...'காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்... மேலும் பார்க்க

Nobel Prize: விதிகள் மீறப்படுமா? ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுமா?

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் 15-க்கும் மேற்பட்ட முறை தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'மீண்டும்... மீண்டும்...' சொல்... மேலும் பார்க்க

SIR: ``எங்களை காயப்படுத்தாதீர்கள், காயமடைந்த புலி மிகவும் ஆபத்தானது'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா

இன்னும் சில மாதங்களில் பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின... மேலும் பார்க்க

Nobel Prize: ``அதிபர் ட்ரம்ப் தகுதியானவர்" - வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்!

காசா - இஸ்ரேல் இடையே நடந்துவரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 20 நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்த நிபந்தனைகள் ஒருதலைபட்... மேலும் பார்க்க

Dashvanth நிரபராதியா? | உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | Advocate Ajeetha detailed interview

2017-ம் ஆண்டு, சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு அப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கை... மேலும் பார்க்க