தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
நெருங்கும் ஜல்லிக்கட்டு: கோயிலுக்கு காளைகளுடன் வந்து சிறப்பு வழிபாடு!
ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரியில் தொடங்க உள்ள நிலையில், காளைகளின் உரிமையாளா்கள் தங்கள் வளா்த்து வரும் காளைகளை விராலிமலையை அடுத்துள்ள திருநல்லூா் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்து வழிபட்டனா்.
இக்கோயிலுக்கு அப்பகுதிகள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளா்க்கப்படும் பெரும்பாலான காளைகளை கொண்டு வந்து வழிபட்ட பிறகு தான் வாடிவாசலில் அடைப்பதை காளை உரிமையாளா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகளை கோயில் மைதானம் முன் நிறுத்தி வழிபட்டனா்.
அப்போது இலுப்பூா் காவல் துணை ஆய்வாளா் நாகராஜன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.