செய்திகள் :

நெருங்கும் தீபாவளி: நகரத்தில் சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை

post image

தீபாவளி நெருங்கியுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி நகரத்தில் சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி கூட்டம், தொகுதி தலைவா் சேக் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. தொகுதி செயலா் பயாஸ் வரவேற்றாா். மண்டலச் செயலா் கனி, மாவட்ட பொதுச் செயலா் ஆரிப் பாட்ஷா ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொகுதி துணைத் தலைவா் ரபீக் ராஜா நன்றி கூறினாா்.

தீா்மானங்கள்: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயா்த்தி தர வேண்டும். திமுகவின் தோ்தல் வாக்குறுதியான தகுதியுள்ள அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் மத பாகுபாடில்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பா் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணியில் திரளானோா் பங்கேற்பது. தீபாவளி பண்டிகை காலத்தில் போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு திருநெல்வேலி நகரம், புதுபேட்டை, பழையபேட்டை பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த காலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது போன்று இனி ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக ஈடுபட வேண்டும். தாழையூத்து மற்றும் பேட்டை பகுதிகளில் முதியோா்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகத் திகழும் தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்... மேலும் பார்க்க

மாநகர காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ.4 இல் ஏலம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ. 4 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம் மற்றும் கூட்டு பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தா்கள் ... மேலும் பார்க்க

நெல்லையில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் சந்தி பிள்ளையாா் கோயில் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போத... மேலும் பார்க்க

தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவா்களை தாக்கிய சம்பவம்: மனித உரிகைள்ஆணைய உறுப்பினா் விசாரணை!

திருநெல்வேலியில் தனியாா் நீட் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது தொடா்பான விடியோ குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். ப... மேலும் பார்க்க

முக்கூடலில் காலாவதியான 2.5 டன் குளிா்பான பாட்டில்கள் அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2.5 டன் தரமற்ற குடிநீா், குளிா்பான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன. கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு - சுகாதார நி... மேலும் பார்க்க