செய்திகள் :

பங்குனி உத்திரம்: சங்கடங்கள் தீர்க்கும் சந்தனம் சமர்ப்பணம்; செய்வது எப்படி? - விஷேச வழிபாடுகள்

post image

தமிழர்கள் வாழ்வியலில் நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்கள். ஓர் ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் பௌர்ணமி தினங்களில் வழிபாடு செய்வது விசேஷம் என்பதைக் கண்டறிந்த நம் முன்னோர்கள், அந்த நாளில் பெரும் விழாக்களை ஏற்படுத்தினார்கள். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் அனைத்தும் பௌர்ணமியை ஒட்டியோ அல்லது பௌர்ணமி அன்றோ வரும் விழாக்கள். அந்த வரிசையில் பங்குனி மாதத்தில் நாம் கடைப்பிடிக்கும் வைபவம் பங்குனி உத்திரம்.

பங்குனி உத்திரம் அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டிய புனிதமான நாள். மாதங்களில் 12 வது பங்குனி. நட்சத்திரங்களில் 12 வது உத்திரம். எனவேதான் இந்த நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ஆலயங்களில் தெய்வத் திருமணங்கள் நடைபெறும்.

ஶ்ரீராமன் - சீதா திருக்கல்யாணம்

புராணங்களின் படி பங்குனி உத்திரம், முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாளும் பங்குனி உத்திரமே. மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திர நாளன்று சிறப்புடன் நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாளும் இதுவே. ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்குத் திருமணம் நடந்த தினமும் இதுதான். ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திரமே.

இப்படி சகல தெய்வங்களும் அனுக்கிரகம் செய்யும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் தினமான இந்தப் பங்குனி உத்திரத்தன்று திருமணம் செய்துகொள்வது விசேஷம் என்பார்கள். நாள், நட்சத்திரம் பார்க்காமல் இந்த நாளில் திருமணம் செய்தால் நீடித்த சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இவை மட்டும் பங்குனி உத்திரத்தின் சிறப்புகள் அல்ல. பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்ததும் இந்த நாளில்தான். இந்த நாளில் விரதம் மேற்கொண்ட மகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள். நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கிய மன்மதனை சிவபெருமான் ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மீண்டும் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் நன்நாளில்தான்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கல்யாணக் காட்சி கொடுத்தது, பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்தது, சாஸ்தா அவதாரம் செய்தது என இவை அனைத்தும் நிகழ்ந்தது பங்குனி உத்திர நன்நாளில்தான்.

மாங்கல்ய வரம் தரும் திருமண தரிசனம்

காஞ்சியில், பங்குனி உத்திரத்தன்று, காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமணம் நடக்கும். அப்போது அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வர்.

திருவையாறு அருகே உள்ள திங்களூர் சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறு நாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.

திருவையாறு அருகிலுள்ள புண்ணிய திருத்தலம் திருமழபாடியில், பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவரின் திருமண வைபவம் வெகு பிரசித்தி. திருமண தோஷம் உள்ளவர்கள், திருமழப்பாடி சென்று இந்த வைபவத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். ‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்’ என்று பழமொழியே உண்டு.

பங்குனி உத்திர வழிபாடுகள்

பங்குனி உத்திரம் பற்றிப்பாடும் சம்பந்தர், ‘பலி விழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்’ என்பார். ‘பலி’ என்றால் கொடுத்தல் என்று பொருள் உண்டு. எனவேதான் பங்குனி உத்திர வைபவத்தை ஒட்டி ஆலயங்கள் அருகே அநேகர் அன்னதானம் செய்வர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும். தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வெப்பம் தகிக்கும் கோடையில் வரும் இந்த வைபவத்தில் மக்களின் உடலும் மனமும் குளிரும்படி நீர்மோர், பானகம், தண்ணீர் ஆகியவற்றைத் தானம் செய்வது மிகவும் சிறப்பு. பக்தர்கள் மனம் குளிர்ந்தால் நம் வாழ்க்கை சிறக்கும் என்பார்கள்.

பங்குனி உத்திர நாளில் சிவபெருமானுக்கு சந்தனம் சமர்ப்பித்தல் சிறப்பாகும். பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் சுவாமிக்கு சந்தனக் காப்பிட்டு வழிபடுவார்கள். அதைக் கண்குளிர தரிசித்தாலே நோய்கள் நீங்கிப் புதுத்தெம்பு பிறக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் இருக்கும் சிவபெருமான் படம் அல்லது லிங்கத்துக்கு தூய சந்தனத்தை அரைத்து சாத்துவது சிறப்பு. ஆலயங்களுக்கு நல்ல சந்தனம் வாங்கி தானம் கொடுக்கலாம். ஆலயத்தில் பிரசாதமாகக் கொடுக்கும் சந்தனத்தைக் கொண்டுவந்து வைத்து தினமும் சிறிது அணிந்துகொள்வதன் மூலம் நம் சங்கடங்கள் தீரும் என்பார்கள்.

பங்குனி உத்திரத்தன்று முருக வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி நீறுபூசி முருகனைப் போற்றும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படித்து, ஆலய தரிசனம் செய்து அந்த நாளைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் பெரியோர்கள்.

இந்த ஆண்டு பங்குனி உத்திரம் 11.4.25 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் உத்திர நட்சத்திரம் மாலை 4.11 வரை உள்ளது. எனவே காலையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம். அடுத்த நாள் பௌர்ணமி திதி உள்ளது. இந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டு வர வேண்டிய அவசியம்.

ஆலய தரிசனம் எவ்வளவு செய்கிறோமோ அந்த அளவுக்கு நம் கர்ம வினைகள் நீங்கி வாழ்க்கை வளமாகும். அனைவருக்கும் பங்குனி உத்திர தின வாழ்த்துகள்.

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா: திருக்கொம்பு நடுதலுடன் தொடக்கம்.. | Photo Album

கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு... மேலும் பார்க்க

ஊட்டி மாரியம்மன் கோயில்: பாரம்பர்ய தேரோட்டம் காண அலையெனத் திரண்ட மக்கள்; உப்பு செலுத்தி வழிபாடு!

மலை மாவட்டமான நீலகிரியில் இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில். மாரியம்மன் மற்றும் காளியம்மன் ஆகிய இரு பெண... மேலும் பார்க்க

தீச்சட்டி, அலகு... பக்தி பரவசம்; விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: Photo Album

பங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி ... மேலும் பார்க்க

"உனக்கென்ன வேணும் சொல்லு" - பிள்ளைகளைத் தோளில் சுமந்து பங்குனி விழாவை ரசித்த தந்தைகள் | Photo Album

பங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாகிட்களைப... மேலும் பார்க்க

ஈரோடு: பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா - மஞ்சள் நீராட்டு விழா உற்சாக கொண்டாட்டம் | Photo Album

மஞ்சள் நீராட்டு விழாஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாமஞ்சள் நீராட்டு விழாஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாமஞ்சள் நீராட்டு விழாமஞ்சள் நீராட்டு விழாமஞ்சள்... மேலும் பார்க்க