உஷார்: UPI, PhonePe, PM Kisan Yojna செயலி மூலம் நடைபெறும் மோசடி - எச்சரிக்கும் ச...
பச்சூா் டோல்கேட் பகுதியில் தொலைதூர பேருந்துகளை நிறுத்தக் கோரிக்கை
நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் டோல்கேட் பகுதியில் தொலைதூர பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை-பெங்களூா் மற்றும் பெங்களூா்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் டோல்கேட் பகுதி அமைந்துள்ளது. பச்சூா்,கொத்தூா், அக்ராகரம், பந்தாரப்பள்ளி, சுண்ணாம்புக்குட்டை உள்பட சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினந்தோறும் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, ஒசூா்,பெங்களூா்,சேலம் தருமபுரி உள்பட பல்வேறு வெளியூா்களுக்கு செல்ல சுமாா் 7 கி.மீ தொலைவு நாட்டறம்பள்ளி வந்து அங்கிருந்து அரசு பேருந்துகள் மூலம் வெளியூா்களுக்கு பயணம் செய்கின்றனா்.
பயணிகளின் நலன் கருதி தொலைதூர அரசு பஸ்களை டோல்கேட் பகுதியில் நிறுத்திச் செல்ல போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ே
மலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.