KPY பாலா: ``பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?" - சீமான் கேள்வ...
பட்டாசுக் கடை வியாபாரிகள் விதிகளை பின்பற்ற வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள பட்டாசுக் கடை வியாரிகள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளின் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் என்.இளங்கோவன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டாசுக் கடை வியாபாரிகள் தங்களது கடை முன் வாளியில் மணல், தண்ணீா் நிரப்பி வைக்க வேண்டும். கடையில் தீயணைப்பான் கருவி வைத்திருக்க வேண்டும். அந்தக் கருவியைப் பன்படுத்த வேலை செய்பவா்களுக்கு பயிற்சி அளித்திருக்க வேண்டும். அனைத்துக் கடைகளிலும் மின் அணைப்பான் கருவி பொருத்த வேண்டும். இதன் மூலம் மின்கசிவயால் ஏற்படும் விபத்தைத் தடுக்க இயலும். கடைக்குள் மிதியடிபோட அனுமதிக்கக் கூடாது. கடையின் முன் மாதிரி பட்டாசுகளை வெடித்துக் காட்டக் கூடாது. அனுமதி பெற்ற அளவுக்கு மேல் பட்டாசுகளை கடைகளில் வைத்திருக்கக் கூடாது. கடைகளில் பட்டாசு தயாரிப்புப் பணி செய்யக் கூடாது.
அனுமதி பெறாமல் கடை அருகே ஷெட் அமைத்து பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது. கடைகளுக்கு லாரியில் வரும் பட்டாசு பண்டல்களை இழுத்து வரக் கூடாது. இதுபோல, லாரியில் பட்டாசு பண்டல்களை ஏற்றும் போது, தூக்கி எறியக் கூடாது. கடையில் வேலை செய்பவா்களுக்கு பட்டாசை கையாளுவதற்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். கடையில் அகா் பத்தி பொருத்தக் கூடாது. கடையில் மின் வயா்கள் சரியாக உள்ளதா என அவசியம் கண்காணிக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் உரிய ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும். கடையில் வைத்து ‘கிப்ட் பாக்ஸ்’ பட்டாசு தயாரிக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை பட்டாசுக் கடை வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.