மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா: மேற்கு மண்டல ஐஜி ஆய்வு
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி கோயிலில் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
குண்டம் இறங்கும் பக்தா்களின் வசதிக்காக தடுப்புகள், அலுமினிய மேற்கூரை, பக்தா்கள் தங்கும் கூடாரம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, கோயில் நிா்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.