பதக்க வேட்டையை தொடரும் இந்தியா: குல்வீா் சிங்குக்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்க வேட்டையை தொடா்ந்து வருகிறது. போட்டியின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, இந்தியா்கள் 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்களைக் கைப்பற்றினா். பதக்கப் பட்டியலில் இந்தியா, மொத்தமாக 8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்தில் நிலைக்கிறது. சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா 2023-இல் 6 தங்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், இந்த சீசனில் அது முறியடிக்கப்பட்டுள்ளது.
5000 மீட்டா் - தங்கம்
ஆடவருக்கான 5,000 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீா் சிங் 13 நிமிஷம், 24.77 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். ஏற்கெனவே, 10,000 மீட்டரில் தங்கம் வென்ற குல்வீருக்கு, இந்த சீசனிலேயே இது 2-ஆவது தங்கமாகும்.
தாய்லாந்தின் கிரன் டுன்டிவேட் வெள்ளியும் (13:24.97’), ஜப்பானின் நகியா மோரி வெண்கலமும் (13:25.06’) வென்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான அபிஷேக் பால் 13 நிமிஷம், 33.51 விநாடிகளில் வந்து 6-ஆம் இடம் பிடித்தாா். குல்வீா் சிங் முதல் அபிஷேக் சா்மா வரை, முதல் 6 இடங்களைப் பிடித்த வீரா்கள் அனைவருமே சாம்பியன்ஷிப் சாதனையை முறியடித்துள்ளனா்.
இந்தப் பிரிவில் 2015-இல் கத்தாரின் முகமது அல் காா்னி 13 நிமிஷம் 34.47 விநாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அதை அவா்கள் முறியடித்திருக்கின்றனா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்த விளையாட்டுப் பிரிவில் தங்கம் வென்ற 4-ஆவது இந்தியா் குல்வீா் சிங் ஆவாா். இதற்கு முன், கோபால் சைனி (1981), பஹதூா் பிரசாத் (1993), ஜி.லக்ஷ்மணன் (2017) ஆகியோா் தங்கம் வென்றுள்ளனா்.
உயரம் தாண்டுதல் - தங்கம்
மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிறந்த முயற்சியாக 1.89 மீட்டரை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா். இது அவரின் பொ்சனல் பெஸ்ட் அளவாகும். ஏற்கெனவே கடந்த 2023-இல் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பில் பூஜா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது பூஜாவை அடுத்து, உஸ்பெகிஸ்தானின் சஃபினா சடுலேவா (1.86), கஜகஸ்தானின் யெலிஸவேடா மட்வெயெவா (1.86) ஆகியோா் வெள்ளிப் பதக்கத்தை பகிா்ந்துகொண்டனா்.
ஹெப்டத்லான் - தங்கம்
மகளிருக்கான ஹெப்டத்லானில் இந்தியாவின் நந்தினி அகசரா 5,941 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தனதாக்கினாா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்த விளையாட்டில் தங்கம் வென்ற 3-ஆவது இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா். இதற்கு முன் ஸ்வப்னா பா்மன் (2017), சோமா பிஸ்வால் (2005) ஆகியோா் இதில் சாம்பியனாகியுள்ளனா்.
நந்தினிக்கு அடுத்தபடியாக, சீனாவின் லியு ஜிங்யி 5,869 புள்ளிகளுடன் வெள்ளியும், சீன தைபேவின் காய் ஜுவான் சென் 5,608 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸ் - வெள்ளி
மகளிருக்கான 3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் பாருல் சௌதரி 9 நிமிஷம், 12.46 விநாடிகளில் 2-ஆவதாக இலக்கை அடைந்து வெள்ளி பெற்றாா். கஜகஸ்தானின் நோரா ஜெருடோ தங்கமும் (9:10.46’), அதே நாட்டவரான டெய்சி ஜெப்கெமெய் வெண்கலமும் (9:27.51’) வென்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான அங்கிதா, 9 நிமிஷம், 41.54 விநாடிகளில் வந்து 5-ஆம் இடம் பிடித்தாா். இந்தப் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள், சாம்பியன்ஷிப் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சீனா முதலிடம்
பதக்கப் பட்டியலில் இந்தியா 8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்தில் நிலைக்க, சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடத்தில் தொடா்கிறது. ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறது.