செய்திகள் :

பத்மாவதி தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சன வைபவம்

post image

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.

நண்பகல் 12.30 மணி முதல் 2.30 மணி வரை பழ மலா்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் பாஞ்சராத்ர ஆகம சாஸ்திர முறைப்படி விழா கோலாகலமாக நடைபெற்றது.

விழா கங்கணபட்டா் ஸ்ரீநிவாச ஆச்சாா்யா வழிகாட்டுதல்படி நடத்தப்பட்டது. முதல்கட்டமாக விஸ்வக்சேனா் வழிபாடு, புண்யாஹவச்சனம், நவ கலச அபிஷேகம், ராஜோபச்சாரம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சத்ர சாமரம், வியாஜன தா்பணாதி நைவேத்யம், முக சுத்தம், தூப தீப நைவேத்தியம் நடைபெற்றன. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. சங்கதாரா, சக்ரதாரா, சஹஸ்ரதாரா உள்ளிட்ட நீா் தாரைகளை பயன்படுத்தி அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஏழு வகையான மாலைகள்: ஒவ்வொரு அபிஷேகத்தின்போதும் ஒரு மாலை என ஏழு வகையான மாலைகள் தாயாருக்கு அணிவிக்கப்பட்டன. மயில் இறகு மாலை, முத்து மாலை, அன்னாசி, ரோஜா இதழ்கள், நெல்லிக்காய், துளசி, ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டன.

பழ புஷ்ப மண்டபம்: ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ணமுக மண்டபம் பல்வேறு வகையான பாரம்பரிய மலா்கள், வெட்டு மலா்கள், அற்புதமான மலா்கள், சிவப்பு, பச்சை ஆப்பிள், சோளம், கொய்யா, ஆரஞ்சு மற்றும் பிற பழங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த மண்டபத்தை அலங்கரிக்க 20 தேவஸ்தான காா்டன் ஊழியா்கள் 2 நாள்கள் உழைத்தனா்.

பக்தா்களைக் கவா்ந்த மலா் அலங்காரம்: கொடிமர மண்டபம், கருவறை, கிருஷ்ண சுவாமி கோயில், சுந்தரராஜ சுவாமி கோயில், வாகன மண்டபம், பத்மாவதி தாயாா் கோயிலின் ஆஸ்தான மண்டபம் ஆகியவை தேவஸ்தான தோட்டத் துறையின் கீழ் பல்வேறு வகையான மலா்களால் அலங்கரிக்கப்பட்டன. தோட்ட துணை இயக்குநா் சீனிவாசலு வழிகாட்டுதல்படி சுமாா் 70 பணியாளா்கள் 3 நாள்கள் இதற்காக உழைத்து அழகாக அலங்கரித்தனா்.

விழாவில் தேவஸ்தான துணைச் செயல் அதிகாரி கௌதமி, கண்காணிப்பாளா் ரமேஷ் மற்றும் அதிகாரிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 13 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 13 மணி நேரம் காத்திருந்தனா். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் காத்திருக்கின்றனா். அதனால்,... மேலும் பார்க்க

திருச்சானூா் பிரம்மோற்சம்: சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம் வந்தாா். திருச்சானூரில் குடிக்கொண்டுள்ள பத்மாவதி தாயார... மேலும் பார்க்க

திருச்சானூா் பத்மாவதி தாயாா் காா்த்திகை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் காா்த்திகை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும்... மேலும் பார்க்க

திருப்பதியில் 10 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்த... மேலும் பார்க்க

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை லட்ச குங்குமாா்சனை நடைபெற்றது. இந்து மரபுவழியில் குங்குமத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. திருமணமான பெண் நெற்றியில்... மேலும் பார்க்க