Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மலையாளி - பிரியா தம்பதியின் மகன் தமிழரசன் (20). சனிக்கிழமை தமிழரசன் பரமத்தி வேலூரில் இருந்து பாண்டமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். பொத்தனூரில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் தமிழரசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த தமிழரசனும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரையும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருவரையும் பரிசோதித்த மருத்துவா் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். உயிரிழந்தவா் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம், வடக்கு தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் பாலாஜி (21) என்பது தெரியவந்தது. விபத்தில் பலியான இருவரது உடல்களையும் வேலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக போலீஸாா் அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.