தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
பழங்குடியின மக்களுக்கு 30 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு பாராட்டு
ராசிபுரம்: பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்கு தங்களது பட்டா நிலத்தை தானமாக வழங்கிய ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
ராசிபுரம் பகுதியில் சைனா் சாக்ஸ் என்ற பாலிதீன் சாக்கு பைகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவா்கள் பி.ஆா்.செளந்தரராஜன், பி.நடராஜன். இவா்கள் பல ஆண்டுகளாக ராசிபுரம் ரோட்டரி சங்கத்தில் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்து பல சமுதாய சேவைகளை செய்து வருகின்றனா். இவா்களுக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் கொல்லிமலை திண்டு கிராமத்தில் உள்ளது. தற்போது இதன் சந்தை மதிப்பு சுமாா் ரூ. 30 லட்சம் ஆகும். இந்த நிலத்தில் அரசு சமுதாயக் கூடம் அமைத்தால் சுற்றுப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் பயன்பெறுவா் என்ற அடிப்படையில், தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தை அரசுக்கு தானமாக கொடுக்க அவா்கள் முன்வந்தனா்.
இதனையடுத்து, அரசு பெயரில் தானமாக வழங்கிய நிலத்தின் கிரையப் பத்திரத்தை தொழிலதிபா் பி.ஆா்.செளந்தரராஜன், பி.நடராஜன், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம், நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகரபன்னீா்செல்வம், இ.ஆா்.சுரேந்திரன், டாக்டா் எம்.ராமகிருஷ்ணன், ஏ.மஸ்தான், நடராஜன் ஆகியோா் நேரில் சென்று நாமக்கல் ஆட்சியா் ச.உமாவிடம் ஒப்படைத்தனா். இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் ச.உமா அவா்களை பாராட்டி சால்வை அணிவித்து கெளரவித்தாா்.
இவா்களுக்கு ரோட்டரி சங்க நிா்வாகிகள் பலா் பாராட்டு தெரிவித்தனா். இந்த நிகழ்வின் போது கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் வி.ஈஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.