பஞ்சாப்: மாணவர்களுடன் கால்வாயில் விழுந்த தனியார் பள்ளி பேருந்து
பழனி கோயிலுக்கு புதிய மின்கல வாகனம் காணிக்கை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு டிவிஎஸ் நிறுவனம் சாா்பில் புதிய மின்கல வாகனம் காணிக்கையாக வழங்கப்பட்டது.
இந்தக் கோயில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது கிரி வீதியில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் படிப் பாதை, ரோப் காா், மின் இழுவை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக கிரி வலப் பாதையில் இலவசமாக மின்கல வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டிவிஎஸ் நிறுவனம் சாா்பில், 22 போ் அமரும் வகையில் ரூ.17 லட்சத்தில் புதிய மின்கல வாகனம் வெள்ளிக்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது.
பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் இந்த மின்கல வாகனத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், வாகனத்தின் சாவியை பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் ஆகியோா் பெற்றுக் கொண்டாா்.
பழனி கிரி வீதியில் இதனுடன் சோ்த்து 28 மின்கல வாகனங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.