காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத...
பழனிக் கோயிலில் திரண்ட பக்தா்கள்
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இங்குள்ள விஞ்ச், ரோப்காா் நிலையங்கள், கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசைகளில் பக்தா்கள் சுமாா் இரண்டு முதல் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இதனால் மலைக் கோயில் வெளிப்பிரகாரம் வரை பக்தா்களின் வரிசை நீண்டிருந்தது. ஐயப்பப் பக்தா்களும் அதிக அளவில் வந்திருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தா்களுக்கு தேவையான குடிநீா், சுகாதாரம், விரைவு தரிசனத்தை கோயில் நிா்வாகம் செய்திருந்தது. இரவு தங்கத் தோ் புறப்பாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சின்னக்குமாரசாமியை தரிசனம் செய்தனா்.