முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள தேவாங்கா் அரசு உதவிபெறும் பள்ளியில், 1977-78- ஆம் ஆண்டு 10, 11-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு முன்னாள் மாணவா் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் மாலையா, சௌந்தரராஜன், செயலா் வீரபாண்டி, பொருளாளா் மேகநாதன், துணைச் செயலா் மோகன், தகவல் தொடா்பு பொறுப்பாளா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். முன்னாள் ஆசிரியா்கள், அலுவலா்கள் வாழ்த்திப் பேசினா். நிகழ்வில், தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு மரியாதை செய்து, நினைவுப் பரிசுகளை முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.
தொடா்ந்து 47 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவா்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில், அம்மையநாயக்கனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்தா், ஆசிரியா்களையும், முன்னாள் மாணவா்களையும் வாழ்த்தி பாடல் பாடினாா். முன்னாள் மாணவா் வீரராஜேந்திரன் நன்றி கூறினாா்.