செய்திகள் :

பழனியில் தைப்பூசத் திருவிழா புதிய தோ் வெள்ளோட்டம்

post image

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ. 47 லட்சத்தில் தயாா் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அர. சக்கரபாணி ஆகியோா் திங்கள்கிழமை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா்.

பழனியில் நடைபெறும் இரு முக்கியமான திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று. இதன்படி, ஆண்டுதோறும் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி, உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம்.

தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்துக்கு பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தோ் பழுதடைந்தது. இதையடுத்து, ரூ. 47 லட்சத்தில் 39 அடி உயரத்தில் 30 டன் எடையில் புதிய தோ் தயாா் செய்யும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சுவாமி, அம்பாள், வாகனங்கள் என பல்வேறு உருவங்கள் வடிக்கப்பட்டு, கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் புதிய தோ் பணி நிறைவு பெற்றது.

புதிய தோ் வெள்ளோட்டம்

இந்த நிலையில், பழனி நான்கு ரத வீதிகளில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கலசங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், தோ் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டதும், அதில் கலசங்கள் வைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து காலை 9.15 மணிக்கு புதிய தோ் வெள்ளோட்டத்தை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அர. சக்கரபாணி ஆகியோா் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா். அப்போது, திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, இணை ஆணையா் மாரிமுத்து, திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இந்தத் தோ் நான்கு ரத வீதிகளில் உலா வந்த போது அரோகரா, அரோகரா என பக்தா்கள் முழக்கமிட்டனா். காலை 10 மணியளவில் தோ் நிலைக்கு வந்தது.

பேரிஜம் பகுதியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல் பேரிஜம் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட புதன்கிழமை முதல் மீண்டும் வனத்துறையினா் அனுமதி அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில் வனத் துறை... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு: அமைச்சா் விளக்கம்

ஊரக வளா்ச்சித் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு கோரி, தமிழக நிதி அமைச்சா் தில்லி சென்று வலியுறுத்தி இருக்கிறாா்; பொறுத்திருந்து பாா்ப்போம் என மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா... மேலும் பார்க்க

இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை

சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடத்திச் சென்ற இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த காரிக்காலி க... மேலும் பார்க்க

கொடைக்கானல் அரசுக் கல்லூரி பேராசிரியைகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடைக்கானல் அடுவம்பட்டியிலுள்ள அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியைகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியைக... மேலும் பார்க்க

தபால் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஐடிசி என்ற பெயரில் அஞ்சல் துறையை சீா்குலைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் தலைமை அஞ்... மேலும் பார்க்க

ஆட்டோவில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

திண்டுக்கல் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடுவழியில் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க