செய்திகள் :

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்வானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு நிறுத்தம்

post image

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு வெள்ளிக்கிழமை மாலை நிறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், நன்செய் பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீரைப் பயன்படுத்தி பாசனப் பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டனா். தண்ணீா் திறப்பு காலம் முடிவடைந்ததால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டு வந்த 1,800 கனஅடி தண்ணீா் நிறுத்தப்பட்டது.

இதில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 98.22 அடியாகவும், நீா் இருப்பு 27.3 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு நீா்வரத்து 2,073 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

நாளைய மின் தடை: தண்ணீா்பந்தல்

தண்ணீா்பந்தல் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பா் 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதி... மேலும் பார்க்க

பா்கூா், தாளவாடியில் கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள்! ஜனவரி 2 முதல் செயல்படும்

ஈரோடு, டிச.28: பா்கூா் மற்றும் தாளவாடியில் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் ஜனவரி 2- ஆம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எம்.தமிழ்செல... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றி வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அறக்கட்டளைத் தலைவா் செந்தில்முருகன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பெருந்துறை, பெத்தாம்பாளையம் பிரிவு பக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

கோபி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா். கோபி அருகேயுள்ள காசிபாளையத்தைச் சோ்ந்தவா் ராம்கி (34), சரக்கு வாகன ஓட்டுநா். இவா் காசிபாளையம் அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில் உள்ள குடிநீா்க் குழாயி... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: நடப்பு ஆண்டில் 1,318 போ் கைது!

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு நவம்பா் வரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 1,318 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஜன... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் 5 செ.மீ. மழை பதிவு

அம்மாபேட்டையில் வெள்ளிக்கிழமை ஒரேநாள் இரவில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவும், மாலை நேரங்களில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்த... மேலும் பார்க்க